ரேஷன் கடைகள் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அரசு ரேஷன் கடைகள் மூலம் தரமான அத்தியாவசிய பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யலாமா என்பது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகின்றது. ரேஷன் கடைகளின் வலை அமைப்பை பயன்படுத்தி ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் நுகர்வோர் பொருட்களை வழங்குவதையும் பரிசோதித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த சோதனை நடைபெற்ற வரும் நிலையில் அதன் வரவேற்பையும் சோதனை வெற்றியை தொடர்ந்தும் படிப்படியாக நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.