
இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் MNP விதிமுறைகளை மாற்றுவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மொபைல் எண்ணை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற MNP வசதியை பயன்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிம் கார்டு தொலைந்து போனால் அல்லது புதிய சிம் கார்டுக்கு மாறினால் உடனடியாக வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாது.
சில காலம் காத்திருந்து தான் MNP ஆப்ஷனை பயன்படுத்த முடியும். அதாவது தற்போது நெட்வொர்க் மாறுவதற்கான UPC நம்பர் உடனடியாக ஒதுக்கப்படுகின்றது. அந்த நம்பரை மாற விரும்பும் தொலைதொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து அதே எண்ணில் புதிய சிம்கார்டு வாங்கிக் கொள்ள முடியும். இனி நெட்வொர்க் மாறுவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். மோசடிக்காரர்கள் சிம் கார்டை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவே இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.