அமேசான் நிறுவனம் தன் செலவை குறைக்க விரும்புவதால் அனைத்து விற்பனையாளர்களிடம் இருந்தும் அதிக கமிஷனை வசூலிக்கப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் மேற்கொள்ளப் போகும் இந்த நடவடிக்கையின் வாயிலாக இந்த ஷாப்பிங் தளத்திலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஏனென்றால் அமேசான் மேற்கொள்ளப்போகும் அதிக கமிஷன் கட்டண முறை ஜூன் முதல் அமேசானிலுள்ள தயாரிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். கமிஷன் அதிகரிப்பு எலக்ட்ரானிக்ஸ், கண்ணாடிகள், ஆடைகள் உட்பட பல வகைகளில் தயாரிப்புகளை பாதிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் அமேசானின் இந்த புது மாற்றங்கள், அமேசான் ஃபிளாட்பாரத்தில் ஷாப்பிங் செய்யும் நபர்கள் மற்றும் அவர்கள் வாங்கும் பொருட்களின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமேசானிலுள்ள தயாரிப்புகளின் விலையானது எவ்வளவு அதிகரிக்கப் போகிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் அமேசான் வசூலிக்கும் கமிஷன் கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின், எடுத்துக்காட்டாக 2% உயர்வு இருந்தால் அதே எண்ணிக்கை நுகர்வோருக்கு அனுப்பப்படலாம்.