பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சியில் முறையான பயன்பாட்டில் இல்லாத அனைத்து பொது இடங்களையும் மக்கள் சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனை தடுக்கும் விதமாகசென்னை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ஐம்பது ரூபாய் அபராத விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.