பொதுவாக சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றால் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இருசக்கர வாகன ஓட்டிகள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியாததால் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. ஆனாலும் சாலை விதிமுறைகளை சிலர் முறையாக கடைபிடிக்கவில்லை. பைக் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் பைக் ஓட்டும்போது கண்டிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் இன்றி பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இனி பைக்கில் செல்லும் போது பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ‌ பிரவீன் குமார் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் இனி 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இந்த புதிய விதிமுறை ஜனவரி 1 முதல் அமலாகும்  நிலையில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்களுக்கு காவல்துறையினர் பூ கொடுத்து வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் ‌