உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விஷ்ணுவின் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வீட்டிற்கு வந்த விஷ்ணு காரணமே இல்லாமல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது அமைதியாக இருங்கள் என மனைவி கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த விஷ்ணு தனது மனைவியின் உதட்டை பலமாக கடித்தார். இதனால் அதிக ரத்தம் வெளியேறியது. அங்கு இருந்த அந்த பெண்ணின் சகோதரி விஷ்ணுவை தடுத்து நிறுத்த முயன்றார்.

அந்த நபர் அவரையும் தாக்கியதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது உதட்டில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரால் பேச முடியாததால் தனது கணவர், மைத்துனர், மாமியார் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.