புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்து தேடலில் உலகம் முழுவதும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் டாடா நிறுவனம் அற்புதமான மருந்தை கண்டுபிடித்து புதிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். அதாவது டாடா மெமோரியல் மருத்துவமனை நூறு ரூபாய் விலையில் மிக குறைவான செலவில் மாத்திரைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த மாத்திரைகள் புற்றுநோய் சிகிச்சை மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைத்து மீண்டும் புற்றுநோய் செல்கள் வளர்வதை தவிர்க்க உதவி செய்கிறது.

கடந்த 10 வருட கடமையான உழைப்புக்கு கிடைத்த பலனாக இதை பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்  தெரிவித்துள்ளார்.  மேலும் வரும் ஜூன் ஜூலை மாதங்களுக்குள் இந்த மருந்துகளை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியையும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.