கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களை எவ்வித பாகுபாடும் இல்லாமல் டீச்சர் என்று அழைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

அதாவது பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் போடா போடி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதால் ஆசிரியர்கள் பள்ளிகளில் போடா மற்றும் போடி போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 3 உதாரணமாக இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.