சினிமாவில் இனி வரும் காலங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் கௌரவ வேடங்களிலும் நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். தற்போது அனைவரும் வில்லன் மற்றும் கௌரவ வேடங்களில் நடிப்பதற்கு மட்டுமே என்னை வணங்குகிறார்கள். நான் நடிப்பதால் அந்த படத்திற்கு அதிக கவனம் கிடைக்கின்றது அது நல்லது தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கப்படுகின்றது என்பதால் இந்த முடிவை கைவிட முடிவு செய்துள்ளேன். வில்லனாக நடிக்க அணுகி நான் தவிர்த்த படங்களே 20 படங்களுக்கு மேல் இருக்கும் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.