தமிழகத்தில் காகிதம் இல்லா பால் அட்டை வசதியை பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக கைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலமாக பால் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பொதுமக்கள் ஆவியின் வட்டார அலுவலகங்களுக்கு சென்று இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது நுகர்வோரின் கைபேசிக்கு பால் அட்டை உரிமைக்கான ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அது சம்பந்தப்பட்ட ஆல்வின் டெப்போக்களில் காண்பித்து அவர்களுக்கான பால் வகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் நுகர்வோர் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றோம் இணையதளம் மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெறலாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.