
65 வயதுக்கு முதியோர்களுக்காக கர்நாடக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேற்பட்டவர்கள் கோவில்களில் தெய்வீக தரிசனத்திற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்யலாம். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாக அமைப்பின் கீழ் உள்ள 358 கோவில்களில் இந்த விதி நடைமுறைப்படுத்தப்படும்.
வயது சரிபார்ப்புக்கு ஆதார் அல்லது அடையாள அட்டை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதால் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.