​மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பாஜக அரசின் வஞ்சகத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் திமுகவுக்கு மட்டுமே உண்டு” என்று அவர் சூளுரைத்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு சாதாரண தேர்தலாகப் பார்க்காமல், அது “ஆரிய – திராவிடப் போரின்” மற்றொரு களம் என்று வர்ணித்துள்ளார். இந்தப் போர்க்களத்தில் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; திமுகவினருக்கு இனி ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்று கட்டளையிட்டுள்ளார்!

​”எங்கள் இனம், எங்கள் மொழி ஆகியவற்றைக் காக்க ‘தீ பரவட்டும்’ எனத் தந்தை பெரியார் அன்று சொன்னது போல, இந்தப் போராட்டத்தைத் தொடருவோம்” என்று ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்தித் திணிப்பு மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களுக்கு எதிராக 2026 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.