கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அபின் ஜாய் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு உதவியாக புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து பிரத்தியேகமாக vet.igo.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் நாய்களுக்கான துணைகளை கண்டறிய மட்டுமே செயல்படுகின்றது. நாளடைவில் பூனைகள் போன்ற மற்ற செல்லப் பிராணிகளின் துணையை கண்டறியவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வலைத்தளம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இதன் மூலம் கால்நடை ஆலோசனைகளும் வழங்கப்படும். கேரளா மற்றும் பிற மாநிலங்களில் செல்ல பிராணிகளுக்கான முதல் ஆன்லைன் மேட்ரிமோனி வலைத்தளம் என்று கூறியுள்ளார். இதில் செல்லப் பிராணிகளின் சுய விவரங்களையும் புகைப்படங்களையும் வழங்குவதால் சரியான துணையை தேர்ந்தெடுப்பதை மிகவும் எளிதாகும். மேலும் தற்போது இந்த வலைத்தளம் இலவசமாக செயல்படும் எனவும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.