மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு கொலைகாரர்கள் அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி பல இடங்களில் சென்று வீசினர்.

அசிமின் நண்பரும் வணிக கூட்டாளருமான முகமது அக்தருஸ்ஸாமான்  கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக சிஐடி போலீசார் சந்தேகித்தனர். மேற்குவங்க மற்றும் டாக்காவில் போலீஸ் நடத்திய கூட்டு விசாரணையை தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் பெண் ஒருவரும் இறைச்சி கடைக்காரரும் கைது செய்யப்பட்டனர். சிகிச்சைக்காக இந்தியா வந்த அசிம் கடந்த மே 13 ஆம் தேதி அவருடைய குடியிருப்பில் இருந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.