மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றாலும் நீண்ட கால முதலீடுகள் மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது எஸ் ஐ பி யில் மாதம் நான்காயிரம் ரூபாயை சேமித்தால் 12 சதவீதம் ஆண்டு வருமானம் கணக்கீட்டில் ஒரு கோடியை எட்ட 28 ஆண்டுகள் ஆகும்.

5000 ரூபாயில் அந்த தொகையை 26 வருடங்களிலும், 7500 ரூபாய் மூலம் 23 வருடங்களிலும், 10000 ரூபாய் மூலம் 20 வருடங்களிலும் இலக்கை அடையலாம். அந்த மொத்த முதலீடு செலுத்த முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 சதவீதம் என நான்காயிரம் ரூபாய் மாதாந்திர எஸ்ஐபி மூலமாக 25 ஆண்டுகளில் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.