சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவனது 2024 ஐ துணை முதல்வர் டி கே சிவக்குமார் கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலமாக சிகரெட் விற்பனையின் வயது வரம்பை 18 வருடங்களிலிருந்து 21 ஆக உயர்த்தியது. கர்நாடகா மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இனிமேல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட்டு விற்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து அவரும் நிலையில் கர்நாடகா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு 100 மீட்டருக்குள் சிகரெட் விற்பனை தடை செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  மேலும் எந்த ஒரு பார் மற்றும் உணவகத்திலும் மற்ற இடங்களில் ஹூக்கா விற்பனையை தடை செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளர்.