மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ அல்லது மாநில வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இனிமேல் நீட் தேர்வுக்கு தகுதியுடையவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் அனைத்து திறந்த பள்ளி மாணவர்களையும் நீட் தேர்வுக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சர்ச்சைக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்துள்ளது.