பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மாநில அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மக்களுக்கு மாதம் வழங்கப்படும் பென்ஷன் தொகை நிலையானதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வூதிய தொகையை அரசு 2 மடங்காக உயர்த்தியுள்ளது . இந்த குறிப்பிட்ட தொகையை சில மக்கள் மட்டுமே பெற முடியும் அனைவருக்கும் கிடைக்காது உத்திரபிரதேசம் மாநில அரசு வயதான மாற்றுத்திறனாளி மற்றும் விதவை பெண்களுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாகியுள்ளது.

இதனால் இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வுதிய தொகையில் 500 முதல் 1000 ரூபாய் அதிகமாக கிடைக்கும். விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு உத்திர பிரதேசத்தின் விதவைச் சான்றிதழ் அவசியம். விண்ணப்பித்த பெண் தன்னுடைய கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அவருக்கு கிடையாது. விண்ணப்பித்த பெண்களின் குழந்தைகள் பெரியவர்களாக இருக்க கூடாது.