நீங்கள் வாகன ஓட்டுகிறீர்கள் என்றால் கட்டாயம் உங்களிடம் இந்த ஐந்து ஆவணங்களும் இருக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம். ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதே சமயம் ஓட்டுநர் உரிமத்துடன் வாகனத்தில் ஆர்சி கேட்கப்படுகிறது. இந்த சான்றிதழில் வாகனத்தில் உரிமையாளரின் பெயர், வாகனத்தின் பெயர் மற்றும் இன்ஜின் விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் எழுதப்பட்டிருக்கும். நீங்கள் நிறுத்தப்பட்டால் உங்கள் பதிவு சான்றிதழ் இல்லை என்றால் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டும்போது இந்த ஆவணத்தை உங்களுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். வாகனத்தில் இன்சூரன்ஸ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். அதனை சமர்ப்பிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப்படலாம் அதே சமயம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்திய அரசு PUC சான்றிதழுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால் வாகனம் ஓட்டும் போது இந்த ஆவணத்தை உங்களுடன் வைத்திருப்பது கட்டாயம். இந்த சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது நிறுத்தப்பட்டு பிடிபட்டால் உங்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டும்போது அடையாளச் சான்றிதழை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை விசாரணையின் போது நீங்கள் காட்டியுள்ள ஆவணங்களுடன் பொருந்துமாறு அதிகாரி அதை பயன்படுத்த கேட்கலாம். அவசர காலங்களில் ஆதார் அட்டை மற்றும் கடவுச்சீட்டு அல்லது வேறு ஏதேனும் ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.