
ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மற்றொரு நாட்டுக்கு சுற்றுலா அல்லது வேறு ஏதாவது பணிக்காக சென்றாள் அதற்காக அந்த நாட்டின் அனுமதி பெற்று விசா செயல்முறை முடிக்க வேண்டும். ஒரு சில நாடுகளின் விசாவை பெற நீண்ட கால காத்திருப்பும் பல்வேறு விதமான விதிமுறைகளும் அமலில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இணைய வழியில் இ- விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமம் இல்லாமல் ஜப்பான் நாட்டிற்கு சென்று விட முடியும்.