
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப்பில் அடிக்கடி ஒரு அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி contact list இல்இல்லாத மற்றும் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வாட்ஸ் அப்பிற்கு வரும் அழைப்புகளை தானாகவே mute செய்து கொள்ளும் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களில் இது போன்ற ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.