தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழா, அரசியல் மேடைகளில் பண்பாடு மற்றும் நாகரிகம் எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வதாகச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

திமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளின் பொதுக்கூட்ட மேடைகளில் பெரும்பாலும் ‘ஆடலும் பாடலும்’ போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், விஜய்யின் தவெக விழாவோ முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்துள்ளது. விழாவின் ஒரு பகுதியாகச் சிறுமி ஒருவர் வீரக்கலையான சிலம்பத்தைச் சுற்றித் தனது திறமையை வெளிப்படுத்திய காட்சி, பார்ப்பவர்களை வியக்க வைத்ததோடு, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

“>

 

 

இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ள தவெக ஆதரவாளர் ஒருவர், “பொது விழாக்களை எப்படி நாகரிகமாக நடத்த வேண்டும் என்பதை திமுகவினர் இதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கடுமையாகச் விமர்சித்துள்ளார்.

வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், பெண்களின் வீரத்தையும், தற்காப்புக் கலைகளையும் முன்னிலைப்படுத்துவதே உண்மையான மகளிர் தினக் கொண்டாட்டம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆபாசம் மற்றும் தேவையற்ற கேளிக்கைகளைத் தவிர்த்து, ஒரு கண்ணியமான அரசியல் கலாச்சாரத்தை விஜய் உருவாக்கி வருவதாக அவரது ஆதரவாளர்கள் பெருமிதத்துடன் பதிவிட்டு வருகின்றனர்