இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்தின்படி இனி ஆதார் அட்டை மற்றும் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே சிம் கார்டுகளை வாங்க முடியும். ஏற்கனவே சிம் கார்டு வைத்திருப்பவர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆகிறது.