தொலைத் தொடர்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட ‘தொலைத்தொடர்பு மசோதா 2023′ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதாவின்படி இனி போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தின்படி, இனி ஆதார் அட்டை மற்றும் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே சிம் கார்டுகளை வாங்க முடியும். ஏற்கெனவே சிம் வைத்திருப்பவர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் சிம் வாங்க ஆதார் அட்டை கட்டாயமாகிறது.