தமிழகத்தில் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவிட செய்ய இனி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் புதிய வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நில அளவீடு செய்வதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நில அளவை செய்யப்பட்ட பிறகு நில அளவையர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.