நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் எங்காவது போக விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது முக்கியமாகும். சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் போகவேண்டும் எனில், பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். தற்போது ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி  புது பாஸ்போர்ட் பெறவேண்டும் எனில், https://www.passportindia.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.

அதன்பின் இதில் நீங்கள் பதிவுசெய்ய வேண்டும். இத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். பதிவுசெய்ததும் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் மின் அஞ்சல் ஐடியில் பதிவுசெய்யப்பட்டுள்ள பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்ததேதி ஆகிய உங்களது பொதுவான தகவல்களை நிரப்பவும். உங்களை குறித்தத் தகவலை நிரப்ப நீங்கள் பாஸ்போர்ட் சேவா எனும் விருப்பத்திற்கு போக வேண்டும்.

பின் அங்கு Continue என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்கு பின் புது பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பம், பாஸ்போர்ட் புதுப்பிப்பு (Apply for Fresh Passport/Reissue of Passport) என்ற விருப்பத்துக்கு போக வேண்டும். அடுத்ததாக கிளிக் செய்து நிரப்பவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அடுத்த பக்கத்துக்கு சென்று அங்கு உங்களிடம் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்புவது முக்கியம்.

அடுத்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு போக அப்பாயின்ட்மென்ட் வாங்கவும். உங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் டெபாசிட் செய்யவேண்டும். அதனை தொடர்ந்து விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்ந்து அனைத்தையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பின் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததும் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சான்றிதழ், உங்களது அடையாள அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்களை எடுத்து சென்று சரிபார்த்து மேலும் செயல்முறையை முடிக்கவும்.  அனைத்து தகவல்களையும் கொடுத்தபின், போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தையும் முடித்தபின், நீங்கள் எளிதாக பாஸ்போர்ட் பெறலாம்.