Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். மேலும் whatsapp செயலியில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியைப் போலவே விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரைட் மற்றும் டார்க் மோட் செட் செய்து கொள்ளலாம்.

அதனை வாட்ஸ் அப் வெப் பயனர்களுக்கும் வழங்கும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி whatsapp வெப் பயனர்களும் விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரைட் மற்றும் டார்க் மோட் செட்  செய்து கொள்ளலாம். அதுபோக இன்னும் ஏகப்பட்ட அப்டேட்டுகளையும் whatsapp வெப் பயனர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.