இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமயமாகிவிட்டது. இந்த நவீனமயத்தால் பல நன்மைகள் நடந்தாலும் ஒருசில தீமைகளும் நடக்கின்றார். அந்தவகையில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் தினமும் சுமார் 10,000 பாக்டீரியாக்கள் உடலில் சேர்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.

சிலர் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, ஸ்மார்ட் வாட்சை அணிந்தபடியே இருக்கின்றனர். இப்படித்தான் உங்களுக்குத் தெரியாமலேயே கடிகாரங்களில் கெட்ட பாக்டீரியாக்கள் வந்து உடலில் சேரும். பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றில் இந்த பாக்டீரியாக்கள் அதிகம் சேரும்.