எலுமிச்சை தோல் என்பது கிருமி நாசினியாக பயன்படுகின்றது. சோப் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதற்கு பதில் எலுமிச்சை தோலுடன் உப்பு சேர்த்து சுத்தம் செய்தால் பலன் அதிகம். பொதுவாகவே எலுமிச்சையை பயன்படுத்தும்போது அதன் சாரை எடுத்து விட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். அதிகமான தோள்கள் சேர்ந்தால் அதனை ஊறுகாய் செய்து சாப்பிடலாம். எலுமிச்சையில் அமிலச்சத்து மற்றும் நறுமணம் அதிகமாக இருப்பதால் இதனை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தினால் பளபளப்பாகவும் மணமாகவும் இருக்கும். காய்கறிகளை நறுக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்வதற்கும் எலுமிச்சை தோலை நீங்கள் பயன்படுத்தலாம்.

பாத்திரம் கழுவும் தொட்டி மற்றும் முகம் கழுவும் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்யவும் இது பயன்படுகிறது. மைக்ரோவேவ் ஓவனில் கெட்ட வாசனை இருக்கும் அல்லது அழுக்குகள் இருக்கலாம். ஒரு பவுலில் எலுமிச்சை தோள்களை போட்டு சூடேற்றினால் அது ஆவி ஆகி மைக்ரோவேவ் ஓவன் முழுவதும் பரவி விடும். அதன் பிறகு நீங்கள் அதனை சுத்தம் செய்யலாம். காப்பர் பாத்திரங்களை எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்யலாம். டீ மற்றும் காபி போடும் பாத்திரங்களில் கறை படிந்து அழுக்காக இருக்கும் போது அந்த பாத்திரங்களை எலுமிச்சை தோலை வைத்து சுத்தம் செய்தால் பளபளப்பாக மாறிவிடும்.