வீட்டில் வளர்க்கின்றனர். இந்த மணி பிளான்ட் வைப்பதால் இயற்கையான காற்று சுத்திகரிப்பு இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனை வீட்டில் வளர்க்க அனைவருக்கும் ஆசை இருந்தாலும் சிலருக்கு வீட்டினுள் மண்ணைக் கொண்டு வருவது பிடிக்காது. அதேசமயம் சில இடங்களில் தாவர வளர்ப்புக்கு உகந்த மண் கிடைக்காது. இப்படியான நிலையில் மண் இல்லாமல் எப்படி மணி பிளான்ட் வளர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். மணி பிளான்ட்டின் கிளைகளை வெட்டி வெறும் நீரில் வைத்து வளர்க்கலாம்.

இதனை நமக்கு பிடித்த மாதிரியான பூச்செட்டிகள் அல்லது கண்ணாடி குவளைகள் என அனைத்திலும் அறைப்பாக நீரை எடுத்து மணி பிளான்ட்டின் கிளைகளை வெட்டி வைத்து வளர்க்க முடியும். நன்கு வேர் பிடித்த உடன் அதனை வெளியில் எடுத்து ஒன்று அல்லது இரண்டு பேர்களை மட்டும் வைத்துவிட்டு மற்ற வேர்களை வெட்டிவிட்டு மீண்டும் நீரில் வைக்க வேண்டும். இந்த முறையில் மண் இல்லாமல் மணி பிளான்ட் வீட்டில் வளர்க்கலாம். இது உங்களுடைய வீட்டுக்கு அழகு சேர்க்கும். வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகத்திலும் இதனை நீங்கள் வைத்துக் கொள்ள முடியும்.