இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஒரு படத்தில் நடித்துவிட்டு அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட GOAT படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் கோட் பட பாடல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சொல்ல முடியாது என கூறியுள்ளார். மேலும்  இனிமேல் பேச்சு கிடையாதது வீச்சுதான் என ரஜினி ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.