
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் அருகே கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு மருந்து கடைக்கு அதிகாரிகள் சென்றனர்.
அப்போது மருந்து கடையில் பணியில் இருந்த எஸ்தர் என்பவரும், அவரது உதவியாளர் குரு என்பவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறியது தெரியவந்தது.
இதனால் அதிகாரிகள் அந்த மருந்து கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மருந்து கடையின் உரிமையாளர் பாலமுரளி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.