
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டு முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்து பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படாது என தெரிவித்துள்ளது.