நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு கல்லூரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்கப்படும். இருந்தாலும் 100% தேர்ச்சி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அதன்படி இந்த முறை தேர்தலை முன்னிட்டு புதிய நடவடிக்கையை தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது. அதாவது வாக்காளர் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர் கையேடு என்ற எட்டு பக்கங்களை கொண்ட சிறிய புத்தகத்தை வழங்குவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இந்த கையேடு பூத் ஸ்லிப் வழங்கும் போது அல்லது தனியாகவோ வாக்குச்சாவடி அலுவலர் மூலமாக வழங்கப்படும். அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை, அதற்கான விண்ணப்ப படிவங்களின் விவரங்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை ஆன்லைனில் தேடும் முறை மற்றும் வாக்குச்சாவடி இடத்தை கண்டறிதல், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எப்படி வாக்களிப்பது, வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை என அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.