தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் முதல் சிறுபான்மையின மக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இந்தத் துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கோவை மாவட்டத்திற்கு 13 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதாவது மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில் தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகுவதாகவும், வனவிலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு இழப்பீடு 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற 13 புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.