தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. ஆனால், ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக, சர்க்கரை தனியாக வழங்குவது உண்டு. தட்டிக் கேட்டால் சரக்கு இல்லை என்று சொல்வார்கள். இதனை தடுக்க TNePDS செயலி உள்ளது. மக்கள் இதன் மூலம் கடைகளில் எவ்வளவு இருப்பு உள்ளது, நாம் எவ்வளவு வாங்கியிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.