முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும் பொது மக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கி நாட்டை அமைதி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.  ஆனால் கடந்த 4 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு அவலமான நிலை நிலவுகிறது. சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து இருப்பது மிகவும் கவலை அளிக்க கூடிய ஒரு விஷயம். ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளது. அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது .

பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் நிலையம் இருக்கிறது என்றால் அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. திமுகவிடமிருந்தும் காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பதுதான் இதற்கு காரணம். தமிழ்நாட்டில் நடக்கும் அன்றாட கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றை பார்க்கும்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா இல்லையா என்ற சந்தம் சந்தேகம் ஏற்படுகிறது. பொதுமக்கள் எல்லாம் காவல்துறையை பார்த்து ஆறுதல் அடைந்த நிலையில் அந்த காவல்துறையே கண்கலங்கி நிற்க வேண்டிய அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு வன்முறை காடாக மாறும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.