
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடிகை கஸ்தூரி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பிராமணர்களை அச்சுறுத்துவது, இழிவு படுத்துவது மற்றும் சாதியை குறிப்பிட்டு பேசுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த திராவிட நோய் ஆட்டி படைக்கும் நிலையில்அதற்கு கண்டிப்பாக மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும்.
ஒரு நோயாளி இறந்த பிறகு அதற்கு மருந்து கண்டுபிடித்து பலன் கிடையாது என்று கூறினார். அதன்பிறகு செய்தியாளர்கள் நடிகை கஸ்தூரியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிராமணர்களுக்காக நல வாரியம் அமைத்தால் 5 லட்சம் பிராமணர் வாக்குகளை திமுகவுக்கு பெற்று தருவேன் என்று நடிகர் எஸ்வி சேகர் கூறியது பற்றி கேட்டனர். அதற்கு ஒரு நல்ல காமெடி நடிகர் என்ற பதில் கூறினார்.மேலும் திராவிடம் ஒரு நோய் என்றும் அதற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கஸ்தூரி விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.