சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் சிறுவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கடல் சூழலியல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆழ்கடலில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக உள்ள அரவிந்த் தனுஸ்ரீ என்பவரது மகள் தாரகை ஆராதனா (11) மற்றும் அவரது உறவினர் மகன் நித்விக் (9) ஆகிய இருவருக்கும் பிறந்தநாளை ஒட்டி, இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

கடலுக்குள் மீன்கள் உண்ணும் பிரத்யேக கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அவர்களது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.