இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் யார் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

இதில் பலரின் பெயர்கள் அடிப்படை நிலையில் குறிப்பாக கங்குலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது பிசிசிஐ கம்பீரை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக கம்பீர் இருந்த நிலையில் அந்த அணி நடப்பு சீசனில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.