
நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திராயன் – 3 விண்கலத்தை அனுப்பி உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தை இஸ்ரோ தரையிறக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைப் போன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யாவும் லூனா – 25 எனும் விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது.
நாளை விண்ணில் ஏவ உள்ள இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை ஐந்து நாட்கள் பயணம் செய்து அடையும் என்றும் பின்னர் ஐந்து முதல் ஏழு நாட்கள் சுற்றுவட்டப் பாதை பயணத்தை முடித்துவிட்டு இந்திய விண்கலம் தரையில் இறங்கும் அதே 23ஆம் தேதி ரஷ்ய விண்கலமும் தரையில் இறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.