இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச ‌ அணி பௌலங்கை தேர்வு செய்த நிலையில் இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 83 ரன்களும் குவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று முதல் இன்னிசை தொடங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் வங்கதேச அணி 149 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்.