தாய்லாந்து, இலங்கையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம். குற்றப்பின்னணி உடைய சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது