வருடத்தில் 220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்பட வேண்டும் என்று டெல்லி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள டெல்லி போன்ற இடங்களில் மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என கூறுவது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.