ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களும் நடுவானிலேயே வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிந்தி, சியோல் கோட் நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக தலைநகர் காராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் கூறியதாவது, இந்தியா பாகிஸ்தான் மோதலில் நாங்கள் தலையிட மாட்டோம். இரு நாடுகளுக்கு இடையே இது பிராந்திய போராகவோ, அணு ஆயுத போராகவோ மாற வேண்டாம் என எதிர்பார்க்கிறோம். அதிகபட்சமாக போர் பதற்றத்தை குறைக்க முயற்சி எடுக்க முடியும் என கூறியுள்ளார்.