உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் அதனை சட்டவிரோதம் என்று அமெரிக்கா கூறி வருவதோடு போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் போரில் ரஷ்யாவுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை வழங்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 19 நிறுவனங்களும் அடங்கும். அதோடு இந்த பட்டியலில் துருக்கி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சீனா ஆகிய நிறுவனங்களும் அடங்கும். மேலும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தாலும் அதனால் பெரிய அளவில் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சில இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.