காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு அவர்களுக்கு செல்லும் சிந்து நதிநீர் உட்பட பெரும்பாலான நதிகளை நிறுத்திவிட்டது. அதன்பிறகு இரு நாட்டுப் படைகளும் எல்லைகளில் வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மதகுரு ஒருவர் தன்னுடைய மகன் அருகே இருந்து கொண்டு பேசிய விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தியாவுக்கு எதிரான போரில் ஒருவேளை பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நடிகை மாதுரி தீக்ஷித்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்களாம். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாதுரி தீட்சித் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.