இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதால் இதற்கு அவ்வப்போது இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வந்த நிலையில் இது தீவிர போராக மாறும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று போர் முடிந்து விட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனை மத்திய அரசும் உறுதிப்படுத்திய நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது பற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அவர் கூறியதாவது,

நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காக எதையும் செய்வோம். மசூதிகள் அழிக்கப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் நாம் நம்முடைய ராணுவ ரீதியிலான கொள்கைகளில் வெற்றி பெற்றுவிட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. சிந்து நதிநீர் பங்கீடு மற்றும் காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வரும் என நம்புகிறேன் என்றார்.

மேலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது அதனை வெற்றிகரமாக முறியடித்து அவர்களை ஓட ஓட விரட்டியது இந்திய ராணுவம். இப்படி இருக்கையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அவர்கள் தற்பெருமை காட்டிக்கொள்வது நகைச்சுவையாக இருக்கிறது என நெட்டிசன்கள் பலரும் பாகிஸ்தான் பிரதமரை கேலி செய்கிறார்கள்.