
உலக நாடுகளில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசு முதலீட்டு நிறுவனங்கள் தான் தங்கத்தை முக்கிய பொருளாக பார்க்கிறது. உலக சந்தையைப் பொறுத்தவரை, தங்கத்துக்கான டிமாண்ட் 6% குறைந்திருந்தாலும், இந்தியாவில் அதன் டிமாண்ட் 10% அதிகரித்திருப்பதாக World Gold Council தகவல் வெளியாகியுள்ளது. அதே போல தங்கம் விலை கிட்டத்தட்ட 8% உயர்ந்துள்ள காரணத்தால், மக்களில் பலர் தங்களது பழைய நகைகளை விற்பனை செய்துள்ளனர். அதன்படி, பழைய நகைகளை விற்பனை செய்வது 37% ஆக அதிகரித்துள்ளது. பழைய நகைகள் விற்கப்படுவது மேலும் அதிகரிக்கலாம் என்று WGc குறிப்பிட்டுள்ளது.