உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்கட் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் twitter நிறுவனத்தில் இருந்து பெருவாரியான ஊழியர்களை பணி நீக்கம் செய்து மஸ்க் நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு டுவிட்டர் பிளூ டிக் வசதிக்கு மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் முறையையும் மஸ்க் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் 3 twitter நிறுவனங்களில் 2 ட்விட்டர் அலுவலகங்களை மூடுவதற்கு மஸ்க் முடிவு செய்துள்ளதாக தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய 3 இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள டுவிட்டர் அலுவலகங்களை மூடுவதற்கு மஸ்க் முடிவு செய்துள்ளாராம். சமீப காலமாகவே செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் இரண்டு டிவிட்டர் நிறுவனங்களை மூடி செலவினங்களை கட்டுப்படுத்த மஸ்க்  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகங்கள் மூடப்பட்டால் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதால் ஊழியர்கள் மத்தியில் இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.